முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டிறைச்சிக்கு தடை : பா.ஜ.க. மீது லல்லு பாய்ச்சல்

சனிக்கிழமை, 3 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா - மாட்டிறைச்சிக்கு தடை செய்யப்பட்ட விவகாரத்தை இந்த நாட்டை வகுப்புவாதப் படுத்தும் ஒரு ஆயுதமாக பாரதீய ஜனதா கட்சி பயன்படுத்துகிறது என்று ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். பாட்னாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அப்பொழுது, அவர் கூறியதாவது.,

மாட்டிறைச்சி விவகாரம் இந்த தேசத்தை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தவே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்துக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களும் அதை சாப்பிடுகிறார்கள். இன்னும் சிலர் வழக்கமாக பயன்படுத்திகிறார்கள்.

ஆகவே அது மாட்டிறைச்சியா அல்லது மட்டனா என்பது தற்போதைய பிரச்சினை அல்ல இவ்வாறு கூறிய லல்லு அதேநேரத்தில் இறைச்சி சாப்பிடுவது கூடாது என்றும் கூறினார். காரணம், அது பல நோய்களுக்கு வழிவகுத்து விடும் என்று எச்சரித்தார். உ.பி.யில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முதியவர் ஒருவர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். இந்த சம்பவத்தை முன் வைத்து லல்லு தனது கருத்துகளை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago