முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 35 மீனவர்கள் உடனடியாக மீட்டுத்தர பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சனிக்கிழமை, 3 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 28 மீனவர்களையும் அவர்களது 31 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்டுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 1 ஆம் தேதி.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் மீன்பிடி தளத்தில் இருந்து ஏழு மீனவர்கள், படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை பிடித்துச் சென்ற இலங்கை கடற்படையினர் இலங்கையின் காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பாவியாக, ஆயுதங்கள் அற்ற இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்லும் சமீபத்திய சம்பவங்கள் தமிழக மீனவர்கள மத்தி்யில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவி மீனவர்களை கைது செய்யும் தொடர் நடவடிக்கைகள், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி களமான பாக் ஜல சந்தி பகுதியில் அவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுக்கும் நோக்கில் உள்ளது. கடந்த 1974-76 ஆகிய ஆண்டுகளில் இலங்கை-இந்தியா இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை பிரச்னை முடிந்து விட்டதாகக் கருதக் கூடாது என எனது அரசு உறுதியுடன் நம்புகிறது. மேலும், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை விரைந்து மீட்டெடுக்க வேண்டும்.

கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா-இலங்கை இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் வழக்கினைத் தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளாமல், கடந்த 1974-76 ஆகிய ஆண்டுகளில் இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை செல்லாததாக அறிவிக்க வேண்டும் எனவும், கச்சத்தீவினை இந்தியாவுக்கு மீட்டுத் தர வேண்டும் என்பதும் வழக்கின் சாரமாகும்.

எனவே, கடந்த 1 ஆம் தேதியன்று பிடித்துச் செல்லப்பட்ட ஏழு தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 28 மீனவர்கள், 31 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய ஏர்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்தப் பிரச்னையில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் மேற்கண்டவாறு முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்