முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

67 எம்.பி.பி.எஸ், 143 பி.டி.எஸ் இடங்களுக்கு இன்று கலந்தாய்வு:

சனிக்கிழமை, 3 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

 சென்னை - தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களை சேர்க்க விரிவுபடுத்தப்பட்ட 3–ம் கட்ட கலந்தாய்வு சென்னையில் இன்று (4–ந்தேதி) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறதுசென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க 10 ஆயிரம் மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள காலி இடங்கள் 3 கட்ட கலந்தாய்வுக்குப் பிறகும் மாணவர்கள் சேராததால் ஏற்பட்டுள்ள காலி இடங்கள் விரிவுபடுத்தப்பட்ட 3–ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 52 எம்.பி.பி.எஸ், காலி இடங்கள், சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள 15 எம்.பி.பி.எஸ். காலி இடங்கள் என மொத்தம் 67 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மேலும் சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவ கல்லூரியில் உள்ள 8 பி.டி.எஸ். காலி இடங்கள், மதுரை பெஸ்ட் பல் மருத்துவ கல்லூரி சமர்ப்பித்துள்ள 33 அரசு ஒதுக்கீட்டில் பி.டி.எஸ். இடங்கள் உள்பட மொத்தம் 143 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ் இடங்களும் விரிவுபடுத்தப்பட்ட 3–ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்