முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் சிங்கார வேலர் மணிமண்டபம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சனிக்கிழமை, 3 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னையில் ரூ 2.34 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிங்காரவேலர் மணிமண்டபம் மற்றும் ஜீவரத்தினம் மணி மண்டபங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.  இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்ப

சென்னை, இராயபுரத்தில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் மணிமண்டபம், சுயமரியாதைச் சுடரொளி என்.ஜீவரத்தினம் மணிமண்டபம் மற்றும் நூலகம் ஆகியவற்றை காணொலிக் காட்சி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வீடியோகான்பரன்சிங் மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், 6 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழரசு அலுவலகம் மற்றும் அச்சக கட்டடத்தினையும், 4 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப் பயன் பாடத்திட்டத்திற்கான புதிய கட்டடம் மற்றும் முன்காட்சி திரையரங்கத்தையும் திறந்து வைத்து, 4 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நான்கு வண்ண வெப்ஆப்செட் இயந்திரத்தின் செயல்பாட்டினை துவக்கி வைத்தார்..

நாட்டிற்காக பெரும் தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு உருவாக்கி பராமரித்து வருகிறது.

அந்த வகையில், சென்னை, மயிலாப்பூர் மீனவர் பகுதியில் பிறந்து, வழக்குரைஞராக திகழ்ந்து, அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை போராட்டத்தை தொடங்கிய போது வழக்குரைஞர் அங்கியை தீயிட்டு கொளுத்திவிட்டு தீவிரமான விடுதலைப் போராட்ட வீரராக மாறி, முதன் முதலாக """"மே தின"" நாளை விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் மீனவர்கள் சார்பில் கொண்டாடி, சிந்தனையாலும் செயலாலும் அல்லும் பகலும் ஏழைத் தொழிலாளி வர்க்கத்திற்காகப் பாடுபட்ட ஓய்வறியா தொண்டர் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் மற்றும் திராவிட இயக்கத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராகவும், மீனவர் இனத்தின் தலைவராகவும், மீனவ மக்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக விளங்கியவரும், அண்ணாவின் அன்பையும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கையையும் பெற்ற,

""கடல் கடலாளிக்கே"" என்று முழங்கி, சாதி, மத வேறுபாடுகளை ஒழிப்பதில் முதன்மையாக திகழ்ந்தவருமான சுயமரியாதைச் சுடரொளி என்.ஜீவரத்தினம் ஆகியோரது நினைவைப் போற்றும் வகையில் சென்னை, இராயபுரத்தில் மணிமண்டபங்கள் அமைக்கப்படுவதுடன், நவீன வசதிகளுடன் கூடிய நூலகமும் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை - இராயபுரத்தில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் மணிமண்டபம், சுயமரியாதைச் சுடரொளி என்.ஜீவரத்தினம் மணிமண்டபம் மற்றும் நூலகத்தினைமுதலமைச்சர்ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். தமிழரசு அலுவலகத்தின் பணிகள் சென்னை, அண்ணா சாலையிலுள்ள அரசு எழுதுபொருள் அச்சுத்துறை வளாகத்தில் பழைய கட்டடத்தில் இடநெருக்கடியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை, தரமணியில் புதிய தமிழரசு அலுவலகம் மற்றும் அச்சக கட்டடம் கட்டுவதற்கும், நான்கு வண்ண வெப்ஆப்செட் அச்சக இயந்திரம் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார்கள்.

அதன்படி, சென்னை, தரமணியில் 6 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழரசு அலுவலகம் மற்றும் அச்சக கட்டடத்தினை திறந்து வைத்ததோடு, 4 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நான்கு வண்ண வெப்ஆப்செட் இயந்திரத்தின் செயல்பாட்டினையும் முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்கள். மேலும், சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 16,536 சதுர அடி கட்டட பரப்பளவில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப் பயன் பாடத்திட்டத்திற்கான புதிய கட்டடத்தையும், 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன மயமாக்கப்பட்ட முன்காட்சி திரையரங்கத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். . செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு 17 கோடியே 55 லட்சம் ரூபாய் ஆகும். இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள்

செயலாக்கத் துறை அமைச்சர் . கே.டி. ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர்  ஞானதேசிகன்,தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மற்றும் அலுவலால் அரசு இணைச் செயலாளர். ஜெ.குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago