முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா தோல்வி

சனிக்கிழமை, 3 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

தர்மசாலா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெறும் என நினைத்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் வெள்ளி மாலை நடந்தது. டாஸ் வென்ற ஃபாஃப் டூப்பிளெச்சி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தவான் 3 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோஹ்லி களமிறங்கினார். கோஹ்லி 42 ரன்களுடன் அவுட்டானார். ரோஹித் சர்மா நின்று விளையாடி 106 ரன்கள் எடுத்தார். 66 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பலத்தை சேர்த்து அவுட்டானார் ரோஹித். அதன் பிறகு வந்த ரெய்னா, ராயுடு, கேப்டன் டோணி, பட்டேல் ஆகியோர் தங்கள் பங்கிற்கு ரன்கள் எடுத்தனர்.

டோணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியின் ஸ்கோரை 199க்கு கொண்டு வந்து ஆட்டத்தை முடித்தார். இதையடுத்து தென்னாப்பிரிக்கா 200 ரன்கள் என்ற இலக்குடன் களத்தில் இறங்கியது. ஹாஷிம் ஆம்லா, டி வில்லியர்ஸ் என தென்னாப்பிரிக்க  வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக டூமினியும், பெஹர்டியனும் ஜோடி சேர்ந்து ஆடத் துவங்கினர்.  டூமினியும்பெஹர்டியனும் சேர்ந்து தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். 19.4 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியதாவது.,

வெற்றிக்கு நெருக்கமாக வந்தோம்.. ஆனால் பனிப்பொழிவு சிறிது சிக்கலை ஏற்படுத்தியது. சில தருணங்களில் நாங்கள் அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்தோம். இத்தகைய ஓவர்கள் பவுலர்களுக்கு நெருக்கடியான தருணம், சில தீர்ப்புகள் எங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில், சில ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததும் அழுத்தத்தை அதிகரித்தது. இதுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது என்று தோனி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்