முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயல் நாட்டில் கறுப்புப்பணம் பதுக்கி இருப்பவர்கள் மீது அருண் ஜெட்லி எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 4 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: அயல் நாட்டில் கறுப்புப்பணத்தை பதுக்கி இருப்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் பணம் குறித்து தகவல்களை தெரிவிக்க வேண்டும் என அரசு கூறியிருந்தது. இதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவும் விதிக்கப்பட்டிருந்தது. இதன் படி அறிவிக்காதவர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்று நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். அயல் நாட்டில் கறுப்புப்பணம் பதுக்கி இருப்பதாக ரூ3ஆயிரத்து 770கோடிக்கு சிலர் கணக்கு காட்டி இருக்கிறார்கள்.

இந்தியாவில் கறுப்புப்பணம் உள்நாட்டிலேயே அதிக அளவில் இருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் பணப்புழக்கத்தை கொண்டு வருவதற்கு இந்திய அரசு முயற்சிக்கின்றது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணப்புழக்கம் செய்பவர்கள் பான் கார்டு முறையை கடை பிடிக்க வேண்டும் என்கிற திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது. புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு முத்ரா யோஜனா திட்டத்தில்  வங்கிக்கடன் அளிக்கப்படுகிறது. இந்த கடன் தொகையை ஏ.டி.எம் எந்திரங்கள் மூலமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் அதிக அளவில் வரி விதிப்பு மேற் கொள்ளப்பட்டதால் வரி ஏய்ப்பு நடைபெற காரணமாக அமைந்தது. தற்போதைய அரசு வரி விதி முறையில் மாற்றம் செய்திருக்கிறது. இந்த வரிகளும் நியாயமான முறையில் இருக்கின்றன. குறைந்த அளவு பணம் சம்பாதிப்பவர்கள் கையில் அதிக அளவில் பணம் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பணத்தை பயன் படுத்த அனைத்து சமூகத்தினரும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.

638 நபர்கள் ரூ3ஆயிரத்து 770கோடிக்கு அயல் நாட்டில் கறுப்புப்பணத்தை பதுக்கி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். கறுப்பு பணத்தை அயல் நாட்டில் பதுக்கி இருப்பவர்களுக்கு ஒரு முறை மன்னிப்பு அளிப்பது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருந்தது. இதன்படி செப்டம்பர் 30ம் தேதிக்குள் அந்த விவரத்தை அறிவிக்க வேண்டும்என்றும் அரசு அறிவித்து இருந்தது.கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக அறிவித்தவர்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை . அவர்கள் நிம்மதியாக தூங்கச்செல்லலாம்.

கறுப்பு பணம் குறித்து தற்போது அறிவிக்காதவர்கள் 30சதவீதம் வரி செலுத்த வேண்டும். மேலும்90சதவீதம் அபராதம் கட்ட வேண்டும். மேலும் கறுப்புப்பணம் பதுக்கி இருப்பவர்கள் 10ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலையும் உள்ளது. இனி வரும் காலத்தில் இந்தியாவில் இருந்து கறுப்புப்பணம் அயல் நாடு செல்லாமல் இருப்பதற்கு அரசு கடும் நடவடிக் கை எடுக்கும். சுவிட்சர்லாந்து அரசாங்கம் தங்கள் நாட்டில் கறுப்புப்பணம் பதுக்கி இருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க ஒப்புக் கொண்டுள்ளது. கறுப்புப்பணத்தை அயல் நாட்டில் பதுக்கி இருப்பவர்கள் அது பற்றிய தகவலை தற்போது தெரிவிக்காத போது கடும் விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இவ்வாறு நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்