முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கொல்லப்பட்ட முஸ்லீம் நபர் இறப்புக்கு அரசியல் - மதச்சாயம் பூசாதீர்கள் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 4 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

தாத்ரி(உ.பி): உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் இக்லக் என்ற முஸ்லீம் பசு இறைச்சியை சாப்பிட்டதாக ஏற்பட்ட வதந்தியில் அவர் கொல்லப்பட்டார். இந்த நிகழ்விற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் கடந்த திங்கட் கிழமையன்று 50வயது இக்லக் பசு கன்று குட்டியை கொன்று அதன் கறியை சமைத்து சாப்பிட்டார் என்று அங்குள்ள உள்ளூர் கோவிலில் உள்ள அர்ச்சகர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து அந்த முஸ்லீமை ஒரு கும்பல் அடித்து கொலை செய்தது. மேலும் அவரது 22வயது மகன்டேனிஷ் படு காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் 2 மூளை அறுவை சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் நேற்று டெல்லியில் கூறியதாவது,
தாத்ரியில் நடந்த நிகழ்வு துரதிர்ஷ்ட வசமானது. அதற்கு மதச்சாயம் பூசக்கூடாது. அந்த நிகழ்விற்கு அரசியல் சாயமும் பூசக்கூடாது என்றார்.

இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப் பை ஏற்படுத்தி இருக்கிறது. இக்லக் மரணத்திற்கு பாஜ கட்சியை இதர கட்சிகள் கடுமையாக விமர்சித்து இருக்கின்றன. தாத்ரியில் நடந்த நிகழ்வு ஒரு விபத்து அது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொலை அல்ல என்று உள்ளூர் பாஜ எம்பியும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சருமான மகேஷ் சர்மா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்