முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாத்ரியில் கொல்லப்பட்ட முஸ்லீம் நபரின் குடும்பத்தை உ.பி முதல்வர் அகிலேஷ் சந்தித்து ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, 4 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

லக் னோ(உ.பி): பசு கன்று இறைச்சியை சாப்பிட்டதாக கொல்லப்பட்ட முஸ்லீம் நபர் இக்லக்கின் குடும்பத்தினரை உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று சந்தித்தார். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பதினருக்கு உரிய நீதி கிடைக்க பாடுபடுவேன் என்று அவர் உறுதியளித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் இக்லக் என்ற முஸ்லீம் கடந்த திங்கட் கிழமையன்று பசு கன்றுஇறைச்சியை சாப்பிட்டதாக உள்ளூர் கோவிலில் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை தொடர்ந்து அவரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்தது. அவரது 22 வயது மகன் டேனிசும் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்த இளைஞர் தற்போது உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட இக்லக்கின் குடும்பத்தினருக்கு ரூ20லட்சம் நிவாரண உதவி அளிப்பதாக உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்து இருந்தார் . தற்போது அந்த தொகையை ரூ30லட்சமாக முதல்வர் அறிவித்து இருக்கிறார். இக்லக்கின் 3சகோதரர்களுக்கும் தலா ரூ5லட்சம் அளிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இக்லக்கின் குடும்பத்தினரை முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று சந்தித்தார். அப்போது அந்த குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க செய்வேன் என்று அவர் உறுதியளித்தார். இக்லக்கிற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக் கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இக்லக்கின் தாய் மற்றும் சகோதரர்கள் மற்றும் இக்லக்கின் மகள்கள் ஆகியோரை முதல்வர் சந்தித்தார். முதல்வருடன் உள்ளூர் எம்.எல்.ஏ அசு மாலிக் உடன் வந்தார். இக்லக் கொலை விவகாரம்தொடர்பாக அகிலேஷ் யாதவின் அரசு கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. இந்த விவகாரத்தில் சமாஜ் வாதி கட்சி அரசியல்  நடத்தாது.இக்லக்  கொல்லப்பட்ட விவகாரத்தில் அந்த குடும்பமே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறது. அந்த குடும்பத்தினரின் துயரத்தில் நாங்களும் பங்கெடுத்து கொள்கிறோம். இருப்பினும் நடந்த இந்த நிகழ்வினை அழித்து விட முடியாது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இக்லக்கின் மகன் சிகிச் சைக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரவும் தயாராக உள்ளோம் என்றும் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்