முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.10 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்கம் பிடிபட்டது

ஞாயிற்றுக்கிழமை, 4 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

அவனியாபுரம்: மதுரையில் இருந்து கொழும்பு மற்றும் துபாய்க்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை விமான நிலையத்தில் அவ்வப்போது சிறிய அளவில் கடத்தல் தங்கம் போதைப் பொருட்கள் பிடிபட்டு வந்தன. சென்னை போன்ற பெரு நகரங்களில் சுங்கத் துறை அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக தற்போது கடத்தல்காரர்கள் மதுரை பக்கம் தங்கம் தொழிலை திருப்பி இருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது ரூ.10 கோடி மதிப்புள்ள 40 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டு இருக்கிறது. அதன் விபரம் வருமாறு:

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து மிகின்லங்கா விமானம் மதுரை வந்தது. இதில் பயணம் செய்தவர்கள் தங்கம் கடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு துணை இயக்குநர் பாரிவள்ளல் தலைமையிலான 12 பேர் கொண்ட தனிப்படை அதிகாரிகள் விமான பயணிகளிடம் சோதனை நடத்தினார்கள். ஆனால் யாரிடமும் கடத்தல் தங்கம் சிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை அதிகாரிகள் மதுரை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கொழும்பு விமானத்தில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு இருக்கைக்கு அடியில் சூட்கேஸ் கேட்பாரற்று கிடப்பதை கண்டனர். அதை எடுத்து திறந்து பார்த்தபோது 33 கிலோ தங்க பிஸ்கட்டுகள் இருந்தன.

பயணிகளிடம் சோதனை நடத்துவது தெரிந்ததும் தங்கத்தை கடத்தி வந்தவர்கள் அந்த சூட்கேசை விமானத்தில் போட்டு விட்டு சென்று விட்டனர். அதை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக சூட்கேசை பறிமுத்ல செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே போன்று துபாயில் இருந்து மாலை 4.50 மணிக்கு மதுரை வந்த தனியார் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. துபாய் பயணிகளிடம் தனிப்படையினர் சோதனை நடத்தியதில் 3 பேர் மாட்டிக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விபரம் தெரியவில்லை.

பிடிபட்ட 3 பேரையும் தனிப்படை அதிகாரிகள் மதுரையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களஇடம் விடிய,விடிய விசாரணை நடந்தது. மதுரை வந்த 2 விமானங்களில் இருந்தும் ரூ. 10 கோடி மதிப்புள்ள 40 கிலோ கடத்தல் தங்கம் பிடிப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்