முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடி- மின்னல் தாக்கி உயிரிழந்த 12 பேர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: பலத்த மழையால் வீடுகள் இடிந்தும் இடி- மின்னல் தாக்கியும் உயிரிழந்த 12 பேர் குடும்பத்திற்கு தலா ரூ 1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  , இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை -

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி பகுதி 2 கிராமத்தில் வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்ததில்,கடந்த மே25 ம்தேதி அவ்வீட்டில் வசித்து வந்த . தங்கவேல், அவரது மனைவி,ராஜலெட்சுமி, மகள் ஜனனி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;  கடந்த மே -29 ம்தேதி மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், குறவகுடி கிராமத்தில், போடுவார்பட்டி கிராமம், வெள்ளைக்காரன்பட்டியைச் சேர்ந்த . நல்லமாயன்;  மே -30 ம்தேதி வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், தாமலேரிமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தை கவுண்டர் என்பவரின் மகன் ராஜாமணி; ஜூன் -1 திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ஆலத்தூர் கிராமம், செட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த . சூ.நாகராஜன் என்பவரின் மகள் திவ்யா; ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், ஆசனூர் கிராமம், அரேபாளையம் அருகில் மே29 ம்தேதி அன்று பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த அரேபாளையத்தை சேர்ந்த  மாதன் என்பவரின் மகன் லட்சுமணன் தரைமட்டப் பாலத்தினை கடக்க முயன்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
மே 26 ம்தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டம், குன்னுப்பட்டி ஊராட்சி பெருமாள்மலை அடிவாரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயா;  மே 30 ம்தேதி . நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கொற்கை கிராமத்தைச் சேர்ந்த . கௌதம்: ஆகியோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பால் காலமானார்கள் என்ற செய்தியையும்;

மே26 ம்தேதி வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சென்னாகுப்பம் கொல்லைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த . சிங்காரவேலன் என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன்;  மே- 27 ம்தேதி அரியலூர் வட்டம், கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கோவிந்தம்மாள்; ஜூன்- 3 ம்சதேதி நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், சிறுதலைக்காடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கோவிந்தராஜ்;  ஆகியோர் இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர மத்திய பேருந்து நிலைய அம்மா உணவகத்தில் மே 25 ம்தேதி மின்கசிவு ஏற்பட்டதில் அங்கு பணியிலிருந்த அனாதை செட்டி மடத்தைச் சேர்ந்த காவேரி, மகேஸ்வரி, வீரமணி மற்றும் காஞ்சனா ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர் என்ற செய்தியை அறிந்து நான் வருத்தம் அடைந்தேன்.  இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர மத்திய பேருந்து நிலைய அம்மா உணவகத்தில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்