முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். அமைப்பின் நிழலைக் கூட அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி

ஞாயிற்றுக்கிழமை, 4 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: ஐ.எஸ். அமைப்பின் நிழலைக் கூட நாங்கள் பாகிஸ்தானில் அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷரீப் உறுதி கூறியுள்ளார். லண்டனில் ராணுவ மற்றும் பாதுகாப்புக்கான ராயல் யுனைடெட் சர்வீசஸ் ஆய்வுக் கழகத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:

ஐ.எஸ். அமைப்பை பொறுத்தவரை அதன் நிழலைக் கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இஸ்லாமாபாத்தில் சிலர் ஐ.எஸ். அமைப்புடன் கூட்டணியை காண்பித்துள்ளனர், இது மிக மிக அபாயகரமானது.  எதிர்கால சவால் ஐ.எஸ். தீவிரவாதமே. இது மிகப்பெரிய பெயர். அல்கய்தா ஒரு பெயர் அவ்வளவே ஆனால் தற்போது இஸ்லாமிக் ஸ்டேட் அதைவிட மிகப்பெரிய பெயர்.

ஆப்கானில் தாலிபான்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்துவது மிக மிக அவசியம், இதனை அவர்கள் முறையாகச் செய்யவில்லையெனில் தாலிபான்கள் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து விடும் பேரபாயம் உள்ளது. எனவே ஆப்கன் அரசு-தாலிபான் சமரசம் மிக முக்கியமானது” என்றார் ஷரீப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்