முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திராணி அபாய கட்டத்தைத் தாண்டினார்: மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 4 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்து அவர் 48 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.  மும்பையின் பைகுலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணி அதிக மாத்திரைகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அளவுக்கு அதிகமாக உட்கொண்ட மாத்திரைகளை இந்திராணியின் வயிற்றில் இருந்து டாக்டர்கள் வெளியேற்றி வருகின்றனர். அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜே.ஜே. மருத்துவமனையின் டீன் டி.பி.லஹானே ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது, "அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். தற்போது அவருக்கு முழு நினைவு திரும்பியிருக்கிறது.

அவரிடம் பேச்சுக்கொடுத்தால் பதில் அளிக்கிறார். அவருக்குத் தண்ணீர் கொடுத்தோம். அவர் அதைக் குடித்தார். அவரது நிலை இப்போது தேறியிருக்கிறது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்றார்.  அதிகமான மாத்திரைகள் உட்கொண்டதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அது குறித்து அனைத்து விவரங்களும் இரண்டு நாட்களில் விரிவாக விளக்கப்படும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, அவரது மூளை இயல்பு நிலையில் இருப்பது தெரியவந்தது.

ஓவர்டோஸ் மருந்துகளை எடுத்துக்கொண்டதாக கருதியே அவருக்கு சிகிச்சை அளித்தோம். அது பலனளித்துள்ளது என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்ல முடியும்" என்றார் லஹானே.  ஸ்டார் இந்தியா முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியின் 2-வது மனைவி இந்திராணி. அசாம் மாநிலத்தை சேர்ந்த அவர், தனக்கு ஏற்கெனவே 2 திருமணங்கள் நடந்ததை மறைத்து 3-வதாக பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்தார். முதல் கணவருக்குப் பிறந்த மகள் ஷீனா போராவை (24) தங்கை என்று கூறி தன்னுடன் தங்க வைத்தார். பின்னர் கருத்து வேறுபாடு எழுந்ததால், ஷீனாவை இந்திராணி கொலை செய்ததாக புகார் எழுந்தது. இதற்கு 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோரும் உதவியுள்ளனர். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago