முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் ஜெர்மனி அதிபர் ஏங்கலா பேச்சு வார்த்தை 18 ஒப்பந்தங்கள் கையெழுத்து

திங்கட்கிழமை, 5 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

இந்திய பிரதமர் மோடியுடன் ஜெர்மனி பிரதமர்ஏஞ்சலா பேச்சு
18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
புதுடெல்லி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாமெர்கல் இந்தியா வந்துள்ள நிலையில் இந்தியா-ஜெர்மனி இடையே 18பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவில் 100கோடியூரோ கரன்சியில் சூரிய ஒளி திட்டத்திற்கு முதலீடு செய்வோம் என்று ஜெர்மனி பிரதமர்தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் நேற்று இந்தியாவிற்கு வந்தார்.அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து  இரு நாடுகள் இடையே பாதுகாப்பு உற்பத்தி, வர்த்தகம், உளவுத்துறை, தூய்மை யான சக்தி மற்றும் பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த இரு தலைவர்களும் நடத்திய பேச்சு வார்த்தை மிகச் சிறப்பாக இருந்தது என குறிப்பிட்டனர்.
ஜெர்மனி பிரதமருடன்நடத்திய பேச்சு வார்த்தை குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ஜெர்மனி எங்களது இயற்கை கூட்டாளி. இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கு ஜெர்மனி வலுவூட்டுகிறது. எங்கள் கவனம் இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை சார்ந்தே இருக்கிறது. இந்த உலகில் சவால்களும் வாய்ப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன.இந்தியாவும் ஜெர்மனியும்  மனிதம், அமைதி மற்றும் உலகின் உறுதியான நிலைப்பாட்டுக்காக செயல்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

ஜெர்மனி பிரதமர்ஏஞ்சலா மெர்கல் பெங்களூரு செல்கிறார். அங்கு அவர் தொழிலதிபர்களுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். ஜெர்மனி அதிபரின் பயணத்தை யொட்டி பிரதமர் மோடியும் பெங்களூரு செல்கிறார். அங்கும் அவர் ஜெர்மனி பிரதமருடன்விவாதம் நடத்துகிறார். பாதுகாப்பு உற்பத்தி, வர்த்தகம், நவீன தொழில் நுட்பம், உளவுத்துறை மற்றும் தீவிரவாதத்தை ஒடுக்குதல் மற்றும் மதவாதத்தை தடுத்தல் ஆகியவை குறித்து இந்தியா-ஜெர்மனி ஆகிய நாடுகள் இடையே நட்புறவை மேம்படுத்துகின்றன.

இந்தியா- ஜெர்மனி நாடுகள் இடையே மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும்  ஜெர்மனி கூட்டாட்சி அன்னிய அலுவலகம் இடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் படி இந்தியாவில் ஜெர்மன் மொழியை மேம்படுத்துவது குறித்தும் ஜெர்மனியில் இந்திய மொழிகளை மேம்படுத்துவது குறித்தும் நடவடிக் கை எடுக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மனி மொழி போதிக்கப்பட்டு வந்தது. அந்த மொழிக்கு பதிலாக சமஸ்கிருத மொழி போதிக்கப்படும் என தற்போதைய மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. இதுகுறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரிஸ்பேனில்(ஆஸ்திரேலியா) நாட்டில் நடந்த ஜி-20மாநாட்டிலும் மோடியிடம் ஜெர்மனி பிரதமர்ஏஞ்சலாமெர்கெல் பேசினார்.
இரு தரப்பினரும் ஜெர்மனி நிறுவனங்கள் இந்தியாவில் விரைவில் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்