முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திரபாலாஜி திறந்தனர

திங்கட்கிழமை, 5 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, விருதுநகர் மாவட்டம்காரியாபட்டி பேரூராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளபேருந்து நிலைய பயணிகள் நிழற்குடையினைவருவாய்த்துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்.கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் திறந்து வைத்தனர் .

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலைய பயணிகள் நிழற்குடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் .வே.ராஜாராமன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் .அன்வர்ராஜா (இராமநாதபுரம்),.டி.ராதாகிருஷ்ணன் (விருதுநகர்) ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறை அமைச்சர்.ஆர்.பி.உதயகுமார் , செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்.கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார் பேசும் போது தெரிவித்ததாவது : -

முதலமைச்சர் அம்மாவின் சீரிய செயல்பாடுகளால் தமிழகம் தொழிற்துறையில்; இந்தியாவிலேயே முன்னனி மாநிலமாக திகழ்கிறது. அமைதிப்பூங்காவான தமிழகத்தில் தொழில் தொடங்க சர்வதேச தொழில் நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நடத்திய சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் எதிர்பார்த்த இலக்கைவிட அதிகமான முதலீடுகளை தமிழகத்திற்கு ஈட்டித்தந்து சாதனை படைத்துள்ளார்கள். அதிலும் தென் தமிழகத்தில் வேலைவாய்ப்பினை உருவாக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும், தனிநபர் வருமானத்தை உயர்த்துவதற்கும் 50 சதவீதம் முதலீடு செய்யப்படும் என சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக மக்களின் நல்வாழ்விற்காகவும், பாதுக்காப்பிற்காகவும் 110 விதியின் கீழ் எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். நாடு போற்றும் நான்காண்டு ஆட்சியிலே முதலமைச்சர் ஜெயலலிதா தான் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார்கள். ஏழை, எளிய மக்களுக்காக அயராது உழைக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் நன்றிக்கடன்பட்டவா்களாக இருக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர். கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும் போது தெரிவித்ததாவது : -

இல்லாதவர்களுக்கு உதவும் இதயம் படைத்தவர் முதலமைச்சர்ஜெயலலிதா . முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்புத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏழை, எளிய, இல்லாத, பாட்டாளி மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற தலைவி, ஒப்பற்ற தலைவி முதல்வர் அம்மா தான். இல்லத்தரசிகளின் இன்னல்களைப்போக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி வருகிறார்கள். ஏழை, எளிய மக்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள விலையில்லா கறவை மாடுகள், வௌ;ளாடுகள், பசுமை வீடுகள் என வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை உயர்த்தியவர் முதல்வர் அம்மா தான்.

உலக அளவில் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க முதல்வர் ஜெயலலிதா மாணவர்களின் படிப்புக்கு தேவையான நோட்டுப்புத்தகங்கள், மடிகணினி, புத்தகப்பை, சீருடை, காலணிகள், மிதிவண்டி, வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபட நூல், மதிய உணவு, பேருந்து பயண அட்டை, மாணவா; இடைநிற்றலை குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காரியாபட்டி பேரூராட்சியில் கடந்த நான்காண்டுகளில் ரூ.1058 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரே தலைவி மாண்புமிகு தமிழக முதலவர் அம்மா அவர்கள் தான் இத்தகைய தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர்.பா.காந்திமதிபழனி, துணைத்தலைவர்.கு.பாரதாதேவி, ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் முத்துலட்சுமி முத்துப்பாண்டி (காரியாபட்டி).வேலாயுதம் (சாத்தூர்), துணைத்தலைவர்.பி.ராமமூர்த்தி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்.மா.குணசேகரன், காரியாபட்டி செயல்அலுவலர்.பா.ஜெயசந்திரசேகரன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்