முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழை 20–ந் தேதிக்கு பின் தொடங்கும்

திங்கட்கிழமை, 5 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விடைபெற்றுவிட்டது. ஆனாலும் அந்த காலத்தில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழை கிடைக்கவில்லை. இயல்பான மழை அளவை விட 10 சதவீதம் குறைவாகவே தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது.இந்த நிலையில் வட கிழக்கு பருவமழையை தமிழகம் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது.ஏரி, ஆறுகள் எல்லாம் வறண்டு கிடக்கிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமான 4 ஏரிகளிலும் தண்ணீர் வறண்டு இருப்பதால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மக்களின் குடிநீர் தேவையை அரசு பல்வேறு வழிகளில் நிவர்த்தி செய்து வருகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து போனதால் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தமிழகம் காத்து இருக்கிறது. இந்த ஆண்டு பருவமழை இயல்பு நிலையைவிட அதிகம் பெய்ததால் தான் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பருவமழை காலம் ஐப்பசி, மார்கழி, தை ஆகிய 3 மாதங்கள் வரை இருப்பதால் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை கிடைக்க வேண்டும்.வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் 24–ந் தேதிக்கு பிறகு தொடங்கும். சில நேரம் முன்கூட்டியே தொடங்கவும் வாய்ப்பு உள்ளது.இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 20–ந் தேதிக்கு பிறகு தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பருவமழை காலத்தில் சென்னைக்கு 140 செ.மீ. மழை பெய்ய வேண்டும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பு நிலை அளவு பெய்துள்ளது. சராசரியைவிட 0.2 சதவீதம் குறைவாக பெய்து இருந்தது.ஆனால் இந்த ஆண்டு சராசரி மழை அளவை விட கூடுதலாக தமிழகம் முழுவதும் பருவமழை பெய்தால் குடிநீர் பிரச்சினையின்றி விவசாயமும் செழிப்பாக இருக்கும்.எனவே வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா? என்பது இயற்கையின் தட்ப–வெப்ப சூழ்நிலையை பொறுத்து அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்