முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் சிறுவயது ஆசைகளை நிறைவேற்றுகிறார்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

திங்கட்கிழமை, 5 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜெனிவாவில் நடைபெற்ற ஜ.நா. சபை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். இன்று அதிகாலை 3.30 மணிக்கு லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–ஜெனிவாவில் நடந்த ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்ற நான் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தினேன். ஆனால் மத்திய அரசு மவுனம் சாதித்தது.முதல்–அமைச்சர் ஜெயலலிதா அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்வது கடினம்தான். மத்திய அரசின் முடிவை பொறுமையாகத்தான் பார்க்க வேண்டும்.மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே நடைபயணம் வேடிக்கையாக உள்ளது. நடைப்பயணம் மூலம் மு.க.ஸ்டாலின் தனது சிறுவயது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார். டீக்கடையில் டீ குடிக்கிறார். சைக்கிளில் செல்கிறார். ஆட்டோவில் பயணம் செய்கிறார். இதன் மூலம் அவரது சிறுவயது ஆசை நிறைவேறியுள்ளது.அதனால் எந்த பயனும் இல்லை. மக்கள் இதை வேடிக்கை பார்ப்பதோடு கேலி கிண்டலும் செய்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் துணை முதல்வராக இருந்த போது மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா?ஊழலுக்கு 2 திராவிட கட்சிகளுமே காரணம். இதில் தி.மு.க.வுக்குத் தான் பெரும் பங்கு உண்டு.தேர்தல் கூட்டணி பற்றி 7 மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டோம். பா.ம.க. தலைமையை ஏற்கும் கட்சிகளை கூட்டணியில் சேர்ப்போம்..கம்யூனிஸ்டு கட்சிகள் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதத்துக்கு மேல் உள்ளது. கூட்டணி விஷயத்தில் இப்போது அவசரம் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்