முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: டெல்லியை வீழ்த்தியது கோவா

திங்கட்கிழமை, 5 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

கோவா: ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் 2வது லீக் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லி அணி கோவாவிடம் வீழ்ந்தது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சென்னையின் எஃப்.சி அணியை 3 - 2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி வீழ்த்தியது.

இந்நிலையில் இரண்டாவது லீக் போட்டி கோவாவில் ஞாயிற்று கிழமை இரவு நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே கோவா அணியின் மந்தர் ராவ் தேசாய் முதல் கோலை அடித்து அணிக்கு வலுசேர்த்தார்.  44-வது நிமிடத்தில் ரெய்னால்டோ கோல் அடிக்க கோவா அணி முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பகுதி நேரத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்