முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் தொகை ரூ4ஆயிரத்து 147கோடியாக உயர்வு: அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 5 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இந்தியாவில் கறுப்புபணம் பதுக்கியவர்கள் ரூ3ஆயிரத்து 770கோடி என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது. தற்போது இந்த தொகை ரூ4ஆயிரத்து 147கோடியாக உள்ளது என மத்திய அரசு நேற்று அறிவித்தது.

கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பவர்கள் அது பற்றிய தகவலை அரசிடம் தெரிவித்தால் , அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் என அறிவித்ததுடன் குறிப்பிட்டசதவீத அளவிலேயே வரி விதிக்கப்படும் என அரசு தெரிவித்து இருந்தது.

அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து 638பேர் தாங்கள் வெளி நாட்டில் பதுக்கி இருக்கும் கறுப்பு பண விவரத்தை வெளியிட்டனர். இந்த தொகை ரூ 3ஆயிரத்து 770கோடியாக இருந்தது. ஆனால் அந்த தொகை தற்போது ரூ4ஆயிரத்து 147கோடியாக அ திகரித்து இருக்கிறது என்று வருவாய்துறை செயலாளர் ஹஸ் முக் அதியா தெரிவித்தார். அயல் நாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை 90நாட்களுக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன் படி செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் கறுப்பு பண விவரத்தை தெரிவிக்க அரசு கெடு விதித்து இருந்தது. கறுப்பு பணம் பதுக்கியவர்களிடம் இருந்து மத்திய அரசுக்கு ரூ2ஆயிரத்து 488கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இந்த மாதம் 1ம் தேதியன்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் ரூ3ஆயிரத்து 770கோடி கறுப்புபணத்தை வெளிநாட்டில் பதுக்கி இருப்பதாக தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்