முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு விநியோகத்திட்டத்தில் ஊழியர்களுக்கு பத்து கட்டளைகள் முதல்வர் உத்தரவுடன் செல்லூர் ராஜூ வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: பொதுவிநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொதுவிநியோகதிட்டத்தின் கீழ் வழங்கப்படும்அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்வது குறித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஊழியர்களுக்கு பத்து கட்டளைகளை பிறப்பித்துள்ளார். .

முதலமைச்சர் ஜெயலலிதாவிந் ஆணையின்படி, கூட்டுறவுத்துறை அமைச்சர்.செல்லூர் கே.ராஜூ சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விலையில்லா அரிசி மற்றும் சிறப்பு பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில், போன்ற அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்குதடையின்றி விநியோகம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களின் பசிப்பிணி போக்கும் மகத்தான திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை, 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரும்பணியினை கூட்டுறவுத் துறை சார்ந்த 32,151 நியாய விலைக் கடைகள் மேற்கொண்டு வருகின்றன. இப்பணியினை சிறப்பாக மேற்கொள்ளுதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்களுக்கு கீழ்க்காணும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

1, அம்மாவின் மகத்தான திட்டமான விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை எந்தவித குறைபாடுகளுக்கும் இடம் கொடுக்காத வகையில் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இதில் எந்த ஒரு புகாருக்கும் இடம் தரக்கூடாது.

2,ஒவ்வொரு நாளும், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் பெயர், ஆரம்ப இருப்பு ஆகிய விவரம், எழுதிவைக்கப்பட வேண்டும்.

3, சிறப்பு பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் தேவைக்கு குறைவாக வழங்கப்படும் பொழுது அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர், மண்டல இணைப்பதிவாளர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் துறை உயர் அலுவலருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

4) பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும்பொழுது அனைத்து பொருட்களையும் எவ்வித மறுப்பும் இன்றி சரியான எடையில் வழங்க வேண்டும்.

5) ஒவ்வொரு பொருளையும் பெறுவதற்கு பொதுமக்கள் வெவ்வேறு நாட்களில் வரவேண்டும் என பொதுமக்களை அலைகழிக்க கூடாது.

6) அனைத்து நியாயவிலைக் கடைகளும் உரிய நேரத்தில் காலதாமதமின்றி திறந்து வைக்க வேண்டும்.

7) பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் துறை அலுவலர்களின் தொலைபேசி எண்களை எழுதி வைக்க வேண்டும்.

8) ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் புகார் புத்தகம் மக்களுக்கு தெரியும் வகையில் பராமரிக்க வேண்டும்.

9) வெளிநபர்கள் யாரையும் நியாயவிலைக் கடைக்குள் அனுமதிக்க கூடாது.

10) மேற்கண்ட விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் பா.பாலமுருகன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்