முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைத்தறி ஆய்வாளர்களுக்கு பயிற்சி முகாம் அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தறி ஆய்வாளர்களுக்கு பயிற்சி வகுப்பை சென்னையில் அமைச்சர் கோகுல இந்திரா நேற்று தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் 146 கைத்தறி ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளோருக்கான பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. சென்னை, அண்ணா நகர், நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா துவக்கி வைத்து, 6 கூட்டுறவு நூற்பாலைகளுக்கு 16 ஆலை மேற்பார்வையாளர்கள் () நியமனம் செய்யப்பட்டதற்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

இவ்விழாவில், கைத்தறி, கைத்திறன், துணிநுhல் மற்றும் கதர்த் துறை அரசு முதன்மைச் செயலாளர் .ஹர்மந்தர்சிங்,., கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / கைத்தறி மற்றம் துணிநூல் இயக்குநர் .தி.ந.வெங்கடேஷ், கைத்தறி மற்றும் துணிநுhல் துறை கூடுதல் இயக்குநர் முனைவர்.க.கர்ணன், இணை இயக்குநர்கள், நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய முதல்வர் டாக்டர் பி. ஜெகநாதன்,. அமுதா அருணாசலம், பெருந்தலைவர், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், கூட்டுறவு நூற்பாலைகள் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்