முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன்கடை, கிடங்குகளில் அமைச்சர் காமராஜ் திடீர் சோதனை

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் இரா.காமராஜ் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது விநியோகத் திட்ட கிடங்கு, அசோக்நகரில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடி மற்றும் நியாய விலை அங்காடிகள் ஆகியவற்றில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விலையில்லா அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியவிலை பருப்பு வகைகள், பாமாயில் ஆகியவை, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் ஒதுக்கீட்டின்படி, நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்படுவதை அமைச்சர் ஆய்வு செய்தார். விருகம்பாக்கம் கிடங்கிலிருந்து, 191 அமுதம் மற்றும் கூட்டுறவு நியாய விலை அங்காடிகள் மூலம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 494 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன என்றும், அக்டோபர் மாதத்திற்கு தேவையான அனைத்து வகை பொருட்களும் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.

கிடங்குகளிலிருந்து விடுவிக்கப்படும் பொருட்கள், தீவிர தர பரிசோதனைக்குப் பின்னரே நகர்வு செய்யப்பட வேண்டுமென்று அறிவுறுத்திய அமைச்சர், சேமிப்பிலிருந்த அரிசி, பருப்பு வகைகள் முதலியவற்றின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தார். மூட்டைகள் அனைத்தும், இயக்கப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சமச்சீர் செய்து, ஒப்புதல் பெற்ற பின்னரே லாரிகளில் ஏற்றப்பட வேண்டுமென்று கிடங்கு அலுவலர்களை அறிவுறுத்திய அமைச்சர், லாரிகளில் ஏற்றப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை மறு எடை செய்து பரிசோதித்தார்.

மேலும், நியாய விலை அங்காடி ஆய்வின் போது, அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவைக்கேற்ப தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறதா என்பதைக் கேட்டறிந்த அமைச்சரிடம், பொருட்கள் சரியான எடையுடனும், உரிய தரத்துடனும் சீரான முறையில் வழங்கப்படுகிறது என பொது மக்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் கா. பாலச்சந்திரன், மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago