முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரு நிறுவனங்களுக்கு 25சதவீத வரி அருண் ஜெட்லி தகவல்

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க்: பெரு நிறுவனங்களுக்கு அடுத்த 4ஆண்டுகளில் ஒரே விகிதமான 25சதவீத வரி விதிக்கப்படும் . தனி நபர்களுக்கு நியாயமான முறையில் வரி போடப்படும் என்று நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி நியூயார்க்கில் திங்கட்கிழமை இரவுதெரிவித்தார்.

நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழக மையம் உள்ளது. இதில் அந்த பல்கலைக்கழக ஆசிரியர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் இந்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் கூறியதாவது,
இந்தியாவில் பண பரிவர்த்தனை அதிக அளவில் வங்கி பரிவர்த்தனைமூலம் மேற் கொள்ளப்படும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் செலுத்தப்படும் போது பான் கார்டு பயன் படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் கறுப்புப்பணம் கட்டுப்படுத்தப்படும்.

பெரு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி குறைக்கப்படும். அதன் பின்னர் அதில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும். உலகம் பொருளாதார பாதையில் முன்னேற்றம் காண்பதற்கு சீனாவுடன் மற் றொரு தோளை தேட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் அதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் இருக்கின்றன.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) முறையை  கொண்டு வர பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முக்கிய கவனம் செலுத்துகிறது.  வங்கி பரிவர்த்தனை மூலம் பண பரி வர்த்தனை மேற் கொள்வதால் இந்திய பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்