முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். ஆத்திரமூட்டும் வகையில் தகாத மொழிகளை பயன் படுத்த வேண்டாம் என்று அம்மாநில அரசியல் கட்சித்தலைவர்களை தேர்தல் ஆணையம் கேட்டுக்  கொண்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் துவங்கி 5கட்டங்களாக நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு அரசியல்தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரச்சாரத்தின்போது சில தலைவர்கள் தனிப்பட்ட முறையில்,தாக்கிப்பேசியும் வருகிறார்கள்.

இந் நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு அறிவுரை குறிப்பை அம் மாநில தலைவர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆத்திரம் மூட்டும் வகையில் பேசுவதை அனைத்துக்கட்சிகளும் தவிர்க்க வேண்டும். தகாத வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. ஓட்டுக்காக ஜாதி பெயரை சொல்லியோ, மதத்தின் பெயரைச் சொல்லியோ ஓட்டு கேட்கக்கூடாது. குறிப்பாக தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசக்கூடாது. பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசக்கூடாது. இதனைஅனைத்து கட்சி தலைவர்களும் பின் பற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிவுரை குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்