முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசி வன்முறை பிரதமர் மோடி மீது திக் விஜய் சிங் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் வன்முறைச்சம்பவங்கள் வெடித்துள்ளன. ஆனால் மோடியோ மவுனம் சாதிக்கிறார் என்று காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது வன்முறை சம்பவம் வெடித்தது. இதனால்போலீசார் தடியடி நடத்தினர். கலவரம் மூண்டதை யடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மோடியின் தொகுதியான வாரணாசியில் வன்முறை சம்பவங்கள் மோதல்கள் வெடித்துள்ளன. ஆனால் மத்திய அரசு செயலற்று கிடக்கிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். வாரணாசியில் சில அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்து, விசாரணை நடத்தி  அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். ஆனால் பிரதமரும் பாஜகவும் சில ஊடகங்களும் இந்த விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?-

கலவரத்தில் பல வாகனங்கள் போலீஸ் ஜீப்புகள் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன., போலீசாரும் கூட காயம் அடைந்துள்ளனர். ஆகவே இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago