முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசியில் வன்முறை : 50 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

வாரணாசி: கங்கை நதியில் விநாயகர் சிலைகளை கரைக்கக்கூடாது என்று போலீசார் தடை போட்டனர் . இதனை கண்டித்து ஜீயர்களும் , உள்ளூர் தலைவர்களும்  திங்கட்கிழமையன்றுஎதிர்ப்பு பேரணி நடத்தினார்கள்.இந்த பேரணியின் போது கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக 50பேர் கைது செய்யப்பட்டார்கள்.

வாரணாசியில் விநாயகர் சிலைகளை கங்கை நதியில்  கரைப்பதற்கு போலீஸ் நிர்வாகம் தடைவிதித்ததால் அங்குள்ள உள்ளூர் மக்களும் இந்து தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினார்கள். இந்த பேரணியின் போது தீ வைப்பு சம்பவம் நடந்ததால் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டு மோதல்களும் ஏற்பட்டன.

இந்த மோதல் நிகழ்வைத் தொடர்ந்து அதில் தொடர்புடைய 50பேர் கைது செய்யப்பட்டார்கள். இந்த வன்முறையை தொடர்ந்து நேற்று வாரணாசியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அந்த பகுதி தீவிரமாகவும் கண்காணிக்கப்பட்டது. பள்ளிகள்,கல்லூரிகள் ஆகியவை நேற்று மூடப்பட்டன. வாரணாசி மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ்மணி யாதவ் உத்தரவைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன.

சாலைப்போக்குவரத்தும் மிக குறைவாக காணப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட கோடோலியா பகுதியில் சில சுற்றுலா பயணிகள் மட்டுமே காணப்பட்டனர். வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின் மக்களவைத்தொகுதியாகும். வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மிக அதிக அளவில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தற்போதுநிலமை அங்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. வாரணாசியின் 4காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த ஊரடங்கு உத்தரவு நேற்று முன்தினம்இரவு நீக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்