முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15-ம் தேதி முதல் பாஜக உள்கட்சித் தேர்தல்: மாநிலத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, பாஜகவில் கிளை கமிட்டி தலைவர் முதல் மாநிலத் தலைவர் வரை தேர்வு செய்ய, வரும் 15-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை உள்கட்சித் தேர்தல் நடக்க உள்ளது.

மாநிலத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜக கட்சி விதிகளின்படி கிளை கமிட்டி முதல் அகில இந் தியத் தலைவர் வரை அனைத்து பதவிகளுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். 2009, 2012-ல் நடந்த தேர்தலில் மாநிலத் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று அவர் மத்திய இணை அமைச்சரானார். இதையடுத்து, மாநிலத் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் 2014 ஆகஸ்ட் 16-ம் தேதி நியமிக்கப்பட்டார். தேர்தல் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டதால், உள்கட்சித் தேர்தல் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளது.

இதுகுறித்து கேட்டபோது பாஜக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பாஜகவில் முதல்முறையாக ‘மிஸ்டு கால்’ மூலம் சுமார் 30 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் பணிகள் நடக்கின்றன. கிளை கமிட்டிகளுக்கான தேர்தல் வரும் 15-ம் தேதி தொடங்கும். பிறகு ஒன்றிய அளவிலும் கட்சி அமைப்பு ரீதியாக பிரிக்கப் பட்டுள்ள 42 மாவட்டத் தலைவர் கள், 234 மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள், 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக் கான தேர்தல் நடைபெறும். மாநிலத் தலைவருக்கான தேர்தல் டிசம்பர் 20-ம் தேதிக்குள் நடை பெறும். இதில் 42 மாவட்டத் தலைவர்கள், 234 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். மாநில தேர்தல் அதிகாரியாக கட்சியின் மாநில துணைத் தலை வர் சுப.நாகராஜன் அறிவிக்கப் பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட் டுள்ளது. தேசிய கயிறு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தால் மாநிலத் தலைவர் போட்டியில் இருந்து முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒதுங்கியுள்ளார். கட்சியினர், மேலிடத் தலைவர்களிடம் தமிழிசை, எச்.ராஜா, எஸ்.மோகன்ராஜுலு ஆகியோர் ஆதரவு திரட்டி வருகின்றனர். எச்.ராஜா தனது பலத்தைக் காட்டும் வகையில் சென்னை, காரைக்குடியில் தன் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியுள்ளார். ஆனால், மாநிலத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்றே கட்சி மேலிடம் விரும்புகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்