முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாகித்ய அகாடமி விருதை திரும்ப ஒப்படைத்தார் நயன் தாரா சாகல்

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இந்தியாவில் முற்போக்கு சிந்தனையாளர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுவதை கண்டித்து எழுத்தாளர் நயன் தாரா சாகல் தனது சாகித்ய அகாடமி விருதை திரும்ப ஒப்படைத்தார். இந்த எழுத்தாளர் ஜவகர்லால் நேருவின் உறவினர் ஆவார். இந்தியாவின் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான நயன்தாரா சாகல் விடுத்துள்ள அறிவிப்பில்கூறியிருப்பதாவது,

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தாத்ரியில் அக்லக் என்ற முஸ்லீம் பசு இறைச்சியை சாப்பிட்டார் என அவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.அவர் தனது வீட்டில் இருந்து வெளியே இழுத்து வரப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.  இந்து மதத்தை  சேர்ந்த சில வன்முறையாளர்கள் இது போன்று செயல்பட்டு இருக்கிறார்கள். முற்போக்கு சிந்தனையாளர்களான எம்.எம்.கல்புர்கி, நரேந்திர தபோல்கர், மற்றும் கோவிந்த் பன்சாரே பேன்ற முற்போக்கு சிந்தனையாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முற்போக்கு சிந்தனையாளர்களின் வாழ்க் கை இந்தியாவில்நிச்சயமற்றதாக இருக்கிறது.

இது போன்ற நடவடிக் கைகள் குறித்து பிரதமர் மோடி எந்தவித நடவடிக் கையும் எடுக்காமல் மவுனம் சாதிக்கிறார். இந்த கொலைகளில் நீதி தனது கால்களை இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த தீவிரவாதம் குறித்து பிரதமர் மோடி இன்னமும் மவுனம் சாதிக்கிறார். இத்தகைய நிகழ்வுகளை கண்டித்து நான் பெற்ற சாகித்ய அகாடமி விருதை திரும்ப அளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்