முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாத்ரி கொலை மகேஷ் சர்மா-சங்கீத் சோம் மீது நடவடிக்கை போலீசார் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

லக் னோ:  உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் பசு இறைச்சியை சாப்பிட்டார் என்பதற்காக ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட அக்லக் விவகாரத்தில் பாஜக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ சங்கீத் சோம் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் முகமது அக்லக் என்ற முஸ்லீம் தனது வீட்டில் பசு இறைச்சியை சாப்பிட்டார் என்று அங்குள்ள இந்து கோவிலில் அறிவிப்பு செய்தார்கள் .இந்தஅறிவிப்பை தொடர்ந்து ஓரு கும்பல் அக்லக் வீட்டிற்கு வந்து அவரை தெருவில் இழுத்துப்போட்டு கொலை செய்தது. அக்லக் பசு இறைச்சியை சாப்பிட்டார் என்ற வதந்தியை உண்மை என்று நம்பிய கும்பல் நடத்திய கொடூர தாக்குதல் குறித்து தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்லக் கொலை தொடர்பாக இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.  அக்லக் கொலை விவகாரத்தில் மத்திய பாஜக அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம் ஆகியோர் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் போலீசார் லக் னோ தலைமை காவல் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

போலீசார் சங்கீத் சோமின் வன்முறை தூண்டும் பேச்சு  வீடியோவை வைத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும் என போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். முசாபர் நகரில் நடந்த வன்முறையின் போதும் சங்கீத் சோம் எம்.எல்.ஏ  முக்கிய காரணமாக இருந்தார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சங்கீத் சோம் பிஷாரா பகுதியில் பேசும் போது கடந்த காலத்தில் இந்துக்கள் பதிலடி தந்ததைப்போல மீண்டும் பதிலடி தரும் திறமை பெற்றவர்கள் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசி இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்