முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழிந்து வரும் புலி இனத்தை காக்க அமிதாப் பச்சன் வேண்டுகோள்

புதன்கிழமை, 7 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

மும்பை - அழிந்து வரும் புலி இனத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் அது நம் நாட்டு குடிமக்கள் அனைவரின் கடமை என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிரா மாநில புலிகள் தூதுவராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நிகழ்ச்சி மும்பை போரிவாலி பகுதியில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமிதாப் கூறுகையில்,  மகாராஷ்டிரா மாநில காடுகளில் உள்ள புலிகளை காப்பாற்ற நான் வனத்துறையினருக்கு உதவி செய்வேன்.

அழிந்து வரும் புலிகள் இனத்தை காப்பாற்றுமாறு நான் குரல் கொடுக்க உள்ளது பெருமையாக இருக்கிறது. புலிகளை காக்க வனத்துறை எடுத்து வரும் முயற்சியை பாராட்டுகிறேன். சஞ்சய் காந்தி தேசிய பூங்கா நகரின் மத்தியில் இருப்பது மும்பையின் பாக்கியம்.  அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மகாராஷ்டிராவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. புலிகளை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை ஆகும் என்றார். சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் சபாரி செல்ல புலிகள், சிங்கங்களின் புகைப்படம் உள்ள 2 சிறப்பு பேருந்துகளை அமிதாப் துவக்கி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago