முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டாக்கில் கிரிக்கெட் போட்டி நடத்த தடை விதிக்க கவாஸ்கர் வேண்டுகோள்

புதன்கிழமை, 7 அக்டோபர் 2015      விளையாட்டு
Image Unavailable

கட்டாக் - கட்டாக் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த 2 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் திங்கட் கிழமை நடந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை நெருங்கிய போது கோபமடைந்த ரசிகர்கள், தண்ணீர் பாட்டில்களை மைதானத்துக்குள் எறிந்து ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாதிப்புக்குள்ளானது. ரசிகர்களின் இந்த செயல் குறித்து கருத்து தெரிவித்த கவாஸ்கர்., ரசிகர்கள் பாட்டிலை தூக்கி எறிந்தபோது போலீஸார் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பவுண்டரி எல்லையில் பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. ரசிகர்களின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கட்டாக்கில் சர்வதேச போட்டிகளை நடத்த அனுமதி வழங்கக்கூடாது. ரசிகர்களின் அராஜக செயல்களை தடுக்கத் தவறிய ஒடிசா கிரிக்கெட் சங்கத்துக்கு பிசிசிஐ எவ்வித நிதியுதவியும் அளிக்கக்கூடாது.

அணியின் செயல்பாடு மோசமாக இருக்கிறது என்பதற்காக பொருட்களை மைதானத்துக்குள் எறிந்து போட்டியை சீர்குலைக்கும் உரிமை ரசிகர்களுக்கு கிடையாது. அணி சிறப்பாக விளையாடும்போது ரசிகர்கள் என்ன மதிப்புமிக்க பொருட்களையா எறிகிறார்கள்? அப்படியிருக்கையில் அணி மோச மாக விளையாடும்போது அவர்கள் மீது ரசிகர்கள் குப்பைகளை வீசுவது நியாயமற்றது என்றார். மேலும் ரசிகர்களின் ரகளை சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் வேதனை தெரிவித்துள்ளார். ரசிகர்களின் இந்த அநாகரிக செயல் மாநிலத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாகவும், மேலும் தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்