முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரி விப்ரோ நிறுவனம் மீது பெண்ஊழியர் வழக்கு

புதன்கிழமை, 7 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட அசிஸ் பிரேம்ஜியின் விப்ரோ நிறுவனம் மீது 10லட்சம் பவுன்ட் கரன்சி (ரூ10கோடி) நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் ஊழியர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஷ்ரேயா உகில் என்கிற 39 வயது பெண் விப்ரோ நிறுவனத்தின் லண்டன் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவர் விப்ரோ நிறுவனத்தின் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் அவர் விப்ரோ நிறுவனத்தில் பாலின பாகுபாடு, ஆண் பெண் இரு பாலருக்கும் தரப்படும் சம்பளத்தில் முரண்பாடு ,சித்ரவதை, நியாயமற்ற முறையில் ஊழியர்களை நீக்குதல் போன்ற வை மேற் கொள்ளப்படுகின்றன என குற்றம் சாட்டியிருந்தார்.

அவர் லண்டனில் உள்ள ஊழியர் தீர்வாயத்தில் தனதுபுகாரை தெரிவித்துள்ளார். அந்த புகாரில் பாலின பாகுபாடு, மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சமச்சீரற்ற நிலை ஆகியவை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விப்ரோ நிறுவனத்தின் மூத்த தலைவர் மனோஜ் புன்ஜாவுடன் ஷ்ரேயா உகில் தனிப்பட்ட உறவு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டினார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மனோஜ் புன்ஜா தற்போது விப்ரோ நிறுவனத்தில் இருந்து விலகி அமெரிக்காவில் உள் மைக்ரோ லேண்ட் நிறுவனத்தினன் செயல் உதவித்தலைவராக பதவியேற்றுள்ளார். இதுகுறித்து விப்ரோ நிறுவனம் தரப்பில் கூறுகையில் ,மனோஜ் புன்ஜா மற்றும் ஷ்ரேயா உகில் இருவரும் தனிப்பட்ட முறையில் பழகி இருக்கிறார்கள். அவர்கள் கம்பெனியின் விதிமுறைகளுக்கு மாறாக பழகியதால் இருவரும் இந்த நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஷ்ரேயா உகில் தொடர்ந்துள்ள வழக்கை எதிர் கொள்ளவும் தங்களது நிறுவனம் தயாராக உள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்