முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பேன் சூகி உறுதி

புதன்கிழமை, 7 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

யான்கோன்(மியான்மர்): மியான்மர் பாராளுமன்ற தேர்தலில் ஆங் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெறும் என்று பெரும்பாலான அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். மியான்மரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆங்  சூகியின் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மியான்மர் எதிர் கட்சித்தலைவர் ஆங் சூ கி நேற்று கூறியதாவது,

வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எங்களது கட்சி வெற்றி பெற்றால் நான் இந்த தேசத்தை வழி நடத்தும் ஆட்சியை நடத்துவேன் என்றார். மியான்மரில் வருகிற நவம்பர் மாதம் 8ம் தேதியன்று பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் ஆங் சூ கியின் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில்  வெற்றி பெறுவதற்கான சூழலில் உள்ள ஆங் சூ கி கட்சி சிறிய கட்சிகளுடன் சேர்ந்து பெரும்பான்மை கொண்ட கூட்டணி அரசை அமைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மியான்மரில் கடந்த 2008ம்ஆண்டு ராணுவ ஆட்சி நடந்த போது கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்டப்படி நாட்டின் உயர் தலைவர் பதவியை ஆங் சூ கி வகிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது. ஏனெனில் சூ கியின் கணவரும் அவரது 2 குழந்தைகளும் பிரிட்டிஷ் மக்கள் ஆவார்கள்.  இந்த நிலையில் ஆங் சூ கி கூறுகையில், எங்களது தேசிய ஜனநாயக லீக் கட்சி(என்.எல்.டி) வெற்றி பெற்றால்  நாங்கள் ஆட்சியை அமைப்போம். நான் ஜனாதிபதியாக இருக்கிறனோ இல்லையோ அரசின்  தலைவராக இருப்பேன்என்று ஆங் சூ கி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

மியான்மர் நாட்டில் 50ஆண்டுகள் ராணுவ ஆட்சி நடைபெற்றது. கடந்த 2011ம்ஆண்டு அந்த நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டது. மியான்மர் அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்தின் 25சதவீத இடங்களை ராணுவம் பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்