முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் வேட்பாளராக அன்புமணியை பா.ம.க. அறிவித்தது கூட்டணி தர்மம் அல்ல: தமிழிசை

புதன்கிழமை, 7 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.அவர் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் உண்மையான, மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணிதான் அமைய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பா.ஜ.க. இல்லாத வெற்றி பெறும் அணியோடு கூட்டணி அமைக்கப் போவதாக கூறியுள்ளார். அவரை நாங்கள் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. முதலில் அவர் தனது கட்சியைக் காப்பாற்றி கொள்ளட்டும்.விரைவில் ஒரு குறுகிய செயல் திட்டத்தை அறிவிக்கப் போவதாகவும், ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். அதுவரை அவர் கட்சி இருக்குமா? உடையுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

திராவிட கட்சிகளுக்கு மாற்றான அணி, பா.ஜனதா தலைமையிலான அணிதான் மக்கள் நல கூட்டு இயக்கத்தால் தமிழ்நாட்டில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர இயலாது.2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தோம். 2 இடங்களில் வெற்றியும் பெற்றோம்.தற்போது மத்தியில் மட்டும் எங்கள் கூட்டணியில் இருப்பதாக பா.ம.க.வினர் சொல்கிறார்கள். எங்களைப் பொருத்தவரை நாங்கள் தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள்.மத்தியில் கூட்டணி என்றால் மாநிலத்திலும் கூட்டணி என்று தானே அர்த்தம். எனவே கூட்டணியில் இருந்து கொண்டு தன்னிச்சையாக முதல்–அமைச்சர் வேட்பாளரை பா.ம.க. அறிவிப்பது கூட்டணி தர்மம் ஆகாது.மேலும் முதல்–அமைச்சர் வேட்பாளர் யார் என்று விவாதம் செய்ய வேண்டிய நேரம் இது அல்ல. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு வலுவான அணியை உருவாக்கி வெற்றி பெற வேண்டும் என்ற பொறுப்பும், கடமையும் எங்களுக்கு மட்டுமல்ல தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கும் உள்ளன.யார் முதல்–அமைசச்ர் வேட்பாளர் என்பதையெல்லாம் எல்லாரும் அமர்ந்து பேசி முடிவு செய்து கொள்ளலாம்.தமிழ்நாட்டில் இந்திர தனுஷ் நோய் தடுப்பு மருந்து திட்டத்தில், அது மாநில அரசின் திட்டம் போல முதல்–அமைச்சர் படத்தை மட்டும் போட்டு விளம்பரப்படுத்தியுள்ளனர். அந்த திட்டம் மத்திய அரசின் திட்டமாகும்.அதில் பிரதமர் மோடி படத்தை போடாதது வருத்தத்துக்குரியது. மத்திய அரசில் இருந்து பல்வேறு உதவிகள், பல திட்டங்களுக்கு வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் மாநில அரசு திட்டங்கள் போல வெளிப்படுத்துகிறார்கள்.அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு கூடுதல் நிதி வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். பதிமூன்றாவது ஐந்தாண்டு திட்டத்துக்கு தமிழ்நாட்டுக்கு கூடுதலாக நிதி உதவியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கல்விக்கு பிரதமர் மோடி எதிரானவர் அல்ல. எனவே தேவையான நிதி உதவிகளை வழங்குவார்.

இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்