முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா: இன்று நடக்கிறது

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விசுவநாதர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் என்றென்றும் வற்றாத காசிக்கு நிகரான கங்கை தீர்த்தகுளம் அமைந்துள்ளது. இந்த குளமானது தெய்வீக புலவர் நக்கீரருக்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு மலையை பிளந்து உருவாக்கியதாக செவிசழவி செய்தி கூறுகிறது. அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத வெள்ளக்கிழமை அன்று முகுப்பெருமானின் திருக்கரத்தில் இருந்து வேல் எடுத்து கங்கைக்கு எடுத்து செல்லும் விழா நடந்து வருகிறது.

இந்த ஆண்டிற்கான விழா இன்று காலை 9 மணியளவில் நடக்கிறது.விழாவையொட்டி கோவிலின் கருவறையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், மகாதீப, தூப ஆராதனையும் நடக்கிறது. பிறகு மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு பட்டு சாத்துப்படி செய்யப்பட்டு எடுத்து வரப்படுகிறது. பிறகு கம்பத்தடி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாராக உள்ள பல்லக்கில் வேல் வைக்கப்படும்.

இதனையடுத்து பல்லக்கில் இருந்தபடி வேல் எடுத்து நகரின் முக்கிய நான்கு ரத வீதிகளை வலம் வந்து மலைக்கு கொண்டு செல்லப்படும். மலை உச்சிக்கு சென்றதும் அங்குள்ள மலைமேல் குமரர் என்று அழைக்கக்கூடிய சுப்பிரமணியர் சன்னதியில் வேல் வைக்கப்படும். பிறகு கங்கை தீர்த்த களத்தில் வேலுக்கு மகா அபிஷேக ஆராதனை நடக்கும். அபிஷேகத்தை தொடர்ந்து மீண்டும் மலைவேல் குமரர் சன்னதியில் வேல் சாத்துபடி செய்யப்படும். மாலை 4 மணியளவில் மலையில் இருந்து வேல் எடுத்து வரப்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதியில் வைக்கப்படும். அங்கு பழனியாண்டவருக்கு சிறப்பு அலங்காரமும், வேலுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகமும் நடைபெறும். இதனையடுத்து பூப்பல்லக்கில் வேல் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்குள் சென்று கருவறையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் சாத்துபடி செய்யப்படும்.

இந்த கோவிலை பொறுத்தவரை கருவறையானது மலையை குடைந்து அமைந்து உள்ளது. ஆகவே இங்கு விக்ரங்களுக்கு அபிஷேகம் கிடையாது. அதே சமயம் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் நடந்து வருகிறது. ஆகவே வேல் மகிமை பெறுகிறது. இன்று கருவறையில் இருந்து மலைக்கு வேல் எடுத்து செல்வதால் இன்று காலை 9 மணி முதல் இரவு வரை கோவிலின் கருவறையில் அபிஷேகம் நடைபெறாது. மலைமேல் குமரருக்கு வேல் எடுத்து செல்லப்படும் நாளான இன்று மலை உச்சியில் பக்தர்களுக்கு கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்