முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதிஷ் குமார்-லல்லு அராஜகத்திற்கு இளைஞர்கள் பாடம் புகட்டுவார்கள் பிரதமர் மோடி

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

முங்குர் (பீகார்): இந்துக்களும் மாட்டிறைச்சியை சாப்பிடுகிறார்கள் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியிருந்த கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். பீகார் மாநில சட்டமன்ற தேர்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி லல்லு மற்றும் அந்த மாநிலத்தின் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்தார். பீகார் மாநிலத்தில் இந்த மாதம் 12ம் தேதி முதல் வருகிற நவம்பர் மாதம் 5ம் தேதி வரை 5கட்டமாக சட்டசபைத்தேர்தல் நடக்கிறது.
பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணியை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஆளும் ஐக்கிய ஜனதா தளம் , லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3பெரும் கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபைத்தொகுதிகள் இருக்கின்றன, இந்த தொகுதிகளில் பெருமளவு இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கவேண்டும் என்று ஜனதா பரிவார் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் பாஜ கட்சி அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று பாஜக தலைமை திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. தேர்தல் களத்தில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

பீகாரில் முதல்  கட்ட தேர்தல் இந்த மாதம் 12ம்தேதி நடைபெறுவதால் தேர்தல் பிரச்சாரம் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.  பாரதிய ஜனதாவுக்கு அதிக வாக்குகளை பெற்று தருவதற்காக பிரதமர் மோடி நேற்று முங்குர் நகரில் தனது பிரச்சாரத்தை துவங்கினார். இந்த பிரச்சாரத்தின் போது மோடி பேசுகையில் பசு இறைச்சியை இந்துக்களும் சாப்பிடுவார்கள் என்று லல்லுபிரசாத் யாதவ் கூறுகிறார். அவரது கருத்து பீகாரில் உள்ள யாதவ மக்களையும் அவமதிக்கும் வகையில்இருக்கிறது.யாதவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய லல்லு பிரசாத் யாதவ் அந்த மக்களின் ஆதரவால் தான் ஆட்சி செய்துள்ளார். பசு இறைச்சியை இந்துக்களும் சாப்பிடுகிறார்கள் என்ற கருத்தை நான் கூறியதற்கு சைத்தானின் ஆதிக்கமே காரணம் என்று லல்லு கூறுகிறார். பீகார் மாநிலத்தில் யார் உடலிலும் சைத்தான் புகவில்லை . லல்லு பிரசாத்தின் முகவரி சைத்தானுக்கு எப்படி தெரிந்தது.

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் காட்டாட்சி நடத்தியுள்ளார். இனியும் அந்த ஆட்சி தொடரக்கூடாது தற்போது பீகார் மாநிலத்தில் ஆட்சி நடத்தும் காட்டாட்சிக்கும் வளர்ச்சியை  தரும் அரசுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பீகாரில் யாதவ இனம் பாரம்பரியமாக பசுவுடன் தொடர்புடையது ஆகும். இதனை மறந்து விட்ட லல்லு பிரசாத் பேசுவது வேதனை தருவதாக உள்ளது. பீகாரை நிதிஷ் குமார் சீரழித்து விட்டார். இப்போது மதச்சாயம் பூச பார்க்கிறார்.

பீகார் மாநிலத்தை இளைஞர்கள் முன் னெடுத்து செல்கிறார்கள். நிதிஷ் குமார்-லல்லு பிரசாத் யாதவ் அராஜகத்திற்கு அந்த இளைஞர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.இவ்வாறு பிரதமர் மோடி தனது பிரச்சார  உரையின் போது நிதிஷ் குமாரையும் லல்லு பிரசாத் யாதவையும் கடுமையாக விமர்சித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago