முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாத்ரி கொலை வழக்கில் கடும் நடவடிக்கை எடுப்போம் முலாயம் உறுதி

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

லக் னோ: தாத்ரி கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக் கை எடுப்போம். எங்களது ஆட்சி பறிபோகும் நிலை ஏற்பட்டாலும் நடவடிக் கை எடுப்போம் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் நேற்று கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ் வாதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் உள்ளார்.

அந்த மாநிலத்தில் உள்ள தாத்ரியில் 50வயது முஸ்லீம் முகமது அக்லக் என்பவர் பசு கன்று இறைச்சியை சாப்பிட்டதாக வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து 200 பேர் கொண்ட கும்பல் அந்த முஸ்லீமை வீதியில் இழுத்து வந்து கொலை செய்தது.  இந்த தாக்குதல் உத்தரப்பிரதேச மாநிலம் மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்தியாவின் முற்போக்கு சிந்தனையாளர்களும் தலைவர்களும் தாத்ரி கொலையை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த தாத்ரி கொலை தொடர்பாக முலாயம் சிங் யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,  தாத்ரி சம்பவம் திட்டமிட்ட சதியாகும். அவர்களின் பெயர்களை நீங்கள் விரைவில் அறிவீர்கள். இந்த கொலைவழக்கில் குறிப்பிட்ட கட்சியின் 3பேருக்கு முக்கிய தொடர்பு இருக்கிறது. தாத்ரிக்கு எங்கள் கட்சியின் குழு ஒன்று விரைவில் செல்லும். அதன்பின்னர் அந்த கொலையில் தொடர்புடைய 3பேர்கள் யார் என்பது தெளிவாக தெரிய வரும்.குறிப்பிட்ட சமூகத்தினரை ஒடுக்க வேண்டும் என்று சதி நடக்கிறது. இந்த சதி  தொடர்வதை சமாஜ்வாதி கட்சி அனுமதிக்காது. சமாஜ் வாதி கட்சிக்கு எதிராக மதவாத சக்திகள் சதி செய்து வருகின்றன. இருப்பினும் எங்களது அரசின் வளர்ச்சி பணியால்  முன்னேறி வருகிறோம்.

தாத்ரி கொலை தொடர்பாக பிரதமர் மோடி தீவிர நடவடிக் கை எடுக்க வேண்டும். ஏனெனில் மோடி உத்தரப்பிரதேச மாநில எம்.பியாகவும் உள்ளார். தாத்ரி கொலையில் எங்களது அரசு கடும் நடவடிக் கை எடுக்கும். எங்களது அரசு வீழ்த்தப்படும் நிலை ஏற்பட்டாலும் நாங்கள் தாத்ரி கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக் கை எடுப்போம் இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்