முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செசல்ஸ் கலாச்சார தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமனம்

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

மும்பை: செசல்ஸ் நாட்டின் கலாச்சார தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் நாட்டின் கலையை வளர்ப்பதற்கு பாடுபட்டுள்ளதுடன் நாட்டின் கலாச்சார வளர்ச்சிக்கும் உதவியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
48வயது இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் தான்செசல்ஸ் நாட்டின் கலாச்சார தூதராக நியமிக்கப்பட்டுள்ள விவரத்தை தனது ரசிகர்களுக்கு சமூக ஊடகம் மூலம் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஆவார். அவர் இரு அகாடமி விருதுகளையும், 2கிராமி விருதுகளையும் பாப்டா விருதையும் கோல்டன் குளோப் விருதையும்  அவர் வென்றுள்ளார். இதனைத்தவிர அவர் இந்தியாவில்  மிகப் பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்