முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு விருதுகள்: விண்ணப்பிக்க 26ம்தேதி வரை அவகாசம்- தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 9 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு விருதுகள்: விண்ணப்பிக்க 26ம்தேதி வரை அவகாசம்- தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 15 விருதுகள் மற்றும் சான்றிதழ்களுக்கு வரும் 26ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள், 3.12.2015, மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.விருதுகள் விவரம் விருதுகள்1) சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர்(கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வைதிறன் பாதிக்கப்பட்டோர், செவித் திறன்பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சிகுன்றியோர் மற்றும் தொழுநோயால்குணமடைந்தோர்)5 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்2 சிறந்த ஆசிரியர் -(பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோருக்குகற்பித்தல், செவித் திறன்பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், மற்றும்மன வளர்ச்சி குன்றியோருக்குகற்பித்தல்)3 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்3 சிறந்த சமூகப் பணியாளர் 1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்4 மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்தசிறந்த தொண்டு நிறுவனம்1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்5 மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில்பணியமர்த்திய சிறந்த நிறுவனம்1 விருது 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்6 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில்பணியாற்றும் சிறந்த ஆசிரியர்(செவித் திறன் குறைந்தோருக்குகற்பிக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும்சிறந்த ஆசிரியர்)2 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்7 மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாகபணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்2 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்மொத்தம் 15 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் விருதுகள் பெற, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், ஜவஹர்லால் நேருஉள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை - 78 அல்லது www. scd.tn. gov. in என்ற இணையதளமுகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்அவர்களிடம் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களுக்கு 26.10.2015க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago