முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் : பிரதமர் மால்கம் டர்ன் புல் ஆவேசம்

வெள்ளிக்கிழமை, 9 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

மெல்போர்ன் - ஆஸ்திரேலியாவின் செயல்பாடுகளை பிடிக்காதவர்கள் இந்த நாட்டில் இருக்க வேண்டிய தேவையில்லை . அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி எங்கேயாவது செல்லலாம் என்று ஆஸ்திரலிய பிரதமர் மால்கம் டர்ன் புல் எச்சரித்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் 58வயது போலீஸ் காரர் கர்டிஸ் செங் 15வயது சிறுவன் பர்காட் ஜபாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதல் நடந்த ஒரு வாரத்திற்கு பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன் புல் நேற்று தனது கருத்தினை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் வாழ வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது . ஆஸ்திரேலியாவின் செயல்பாடுகள் பிடிக்க வில்லையென்றால் இங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆஸ்திரேலியாவை கடந்து மிகப் பெரிய உலகம் இருக்கிறது. அங்கு அவர்கள் சுதந்திரமாக   நடமாடலாம். தீவிரவாதத்தின் செயல்பாடாக 58வயது போலீஸ் காரரை 15வயது சிறுவன் சுட்டுக் கொன்று இருக்கிறான். இந்த கொலை தூண்டப்பட்டு நடந்துள்ளது.இந்த தீவிரவாதம் ஆஸ்திரேலிய மக்களிடம் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கலாச்சாரத்தைமதித்து நடக்கும் தன்மை வளர வேண்டும். நாட்டின் வளர்ச்சியை தீவிரவாதம்  தடை செய்கிறது.

சிறுவன் நடத்திய தாக்குதல் தீவிரவாதத்தின் செயல்பாடாகவே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே பார்மட்டா மசூதி தலைவர் நீல் எல்- கடோமி கூறுகையில்  ஆஸ்திரேலியாவை பிடிக்காதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவது நல்லது என்றார். நாங்கள் தீவிரவாதத்தை நிராகரிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் மால்கம் டர்ன் புல்லும் முஸ்லீம் தலைவர்களும் நேற்று காலை நேருக்கு நேராக சிட்னியில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்