முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி கர்நாடகாவில் ஆம்புலன்சுக்கு வழிவிடாத ஓட்டுனர்களின் உரிமம் ரத்து!

வெள்ளிக்கிழமை, 9 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

பெங்களூரு -  ஆம்புலன்சுகளுக்கு வழிவிடாத வாகன ஓட்டுனர்களின் உரிமம் அந்த இடத்திலேயே ரத்து செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் அரசு நடத்தும் ஆரோக்கிய கவசா 108 ஆம்புலன்சுகள் 711 உள்ளன. இந்நிலையில் மேலும் புதிய 150 ஆம்புலன்சுகள் வாங்கப்பட்டுள்ளன. அந்த ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதல்வர் சித்தராமையா துவங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், நகர சாலைகளில் போக்குவரத்து பெரும் பிரச்சனையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு சிக்கலாக இருக்கிறது. பிற வாகன ஓட்டிகள் ஆம்புலன்சுகளுக்கு வழிவிடாவிட்டால் அதன் டிரைவர்களுக்கு கஷ்டமாகிவிடுகிறது. அதனால் ஆம்புலன்சுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்களை அந்த இடத்திலேயே ரத்து செய்வது என்று ஆலோசித்தோம்.

இதையடுத்து ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்வது பற்றி காவல் துறையினருக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.சித்தராமையாவின் இந்த உத்தரவை மருத்துவர்கள் வரவேற்று பாராட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்