முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் வழக்கை விரைவாக விசாரிக்க நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் உறுதி

வெள்ளிக்கிழமை, 9 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - ஆதார் வழக்கு விரைவாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தெரிவித்துள்ளார். பொது விநியோகம், சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு மட் டுமே ஆதார் அட்டையை பயன் படுத்த வேண்டும். அரசின் இதர திட்டங்களுக்கு ஆதார் கட்டாய மில்லை என்று சுப்ரீம் கோர்ட்ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மறுபரி சீலனை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு முறையிட்டது.

இவ்வழக்கு நீதிபதிகள் செலமேஸ்வர், பாப்தே, நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது பழைய உத்தரவை வாபஸ் பெற நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். எனினும் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்ற நீதிபதிகள் பரிந்துரை செய்தனர். இதனிடையே ஆதார் வழக்கு விசாரணையை விரைந்து விசாரிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்விடம் மத்திய அரசு முறையிட்டது.

மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதாடினார்.  இதுகுறித்து தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியதாவது:  ஆதார் வழக்கை 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோருகின்றனர். அதற்கு சாத்தியம் இல்லை. இந்த வழக்கை 9 நீதிபதிகள் விசாரித்தால் மற்ற வழக்குகளின் விசாரணை பாதிக்கப்படும். 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வை நியமிப்பது குறித்து வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படும். வழக்கு விசாரணை விரைவாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago