முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் நாளை முதல் கட்டத் தேர்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

சனிக்கிழமை, 10 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா: பீகார் மாநிலத்தில் 49 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. இம்மாநிலத்தில் நாளை இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதை தொடர்ந்து அம்மாநிலத்தில் தேர்தல் பணிகள் சூடுபிடித்தன. இம்மாநிலத்தில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, ஜனதாதள கட்சிகள் அடங்கிய கூட்டணி உள்ளிட்ட 6 முக்கிய கூட்டணிகள் களத்தில் உள்ளன.

முதல் கட்ட தேர்தல் 49 சட்டமன்றத் தொகுதிகளில் நாளை நடைபெறவுள்ளது. 2-ம் கட்ட தேர்தல் வரும் 16-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் வரும் 28-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் நவ. 1-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் அதாவது இறுதி கட்டத்தேர்தல் நவ. 5-ம் தேதியும் நடக்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவ.8-ம் தேதி தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படும். இத்தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் அரசியல் ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் தாக்கி பேசிக்கொண்டனர்.

சைத்தான் என்றும் பிசாசு என்றும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேச வேண்டாம். ஆத்திரம்மூட்டும் வகையில் தகாத சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் பீகார் தலைவர்களை கேட்டுக் கொண்டபோதும் கூட அதை அவர்கள் பொருப்படுத்த வில்லை. இப்படியாக கடந்த பல வாரங்களாக நடைப்பெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் 49 தொகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது.
நாளை 12-ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்குச் சாவடிகளுக்கு  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுவிட்டன. வாக்கு சாவடிகளில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலம் வன்முறைக்கு பெயர் பெற்ற மாநிலம். இந்த முறை நடைபெறவுள்ள தேர்தல் நிதிஷ் குமாருக்கு வாழ்வா சாவா என்கிற ரீதியில் நடைபெறவுள்ள ஒரு முக்கியமான தேர்தல். ஆகவே வன்முறை நிகழாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளிவந்தன. அவற்றில் பெரும்பாலும் பா.ஜ.க.வுக்கு சாதமாகவே உள்ளன. இருப்பினும் ஒரு சில கருத்து கணிப்புகள் மாறுப்பட்ட தகவல்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago