முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நுழைவுத்தேர்வு பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 10 அக்டோபர் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களின் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தும் முறையை மத்திய அரசுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது. மருத்துவப் படிப்பிற்காக பொது நுழைவுத்தேர்வு குறித்து தற்போது வெளிவந்துள்ள செய்திகள் மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் பொது நுழைவுத்தேர்வு பரிந்துரையை மத்திய அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும். மாணவர்களின் கல்வியில் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காணும் வகையில் திட்டங்களை வகுத்து செயல்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்