முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க பழமைவாதிகள் முயற்சி: மாயாவதி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 10 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

லக்னோ - உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி, மத்தியில் பாஜக கூட்டணியும் ஆட்சிக்கு வந்த பிறகு பழமைவாதிகளும் மதவாத சக்திகளும் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க துடிப்பதாக  மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராமின் நினைவு தினம் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது. லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாயாவதி கூறியதாவது: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், மத்தியில் பாஜக கூட்டணியும் ஆட்சிக்கு வந்த பிறகு பழமைவாதிகளும் மதவாதசக்திகளும் துணிச்சலாக செயல்பட தொடங்கி விட்டனர். இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க அவர் கள் துடிக்கின்றனர். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், நாட்டில் தலித்து களுக்கும் ஆதிவாசிகளுக்கும் பாதுகாப்பு என்பதே கிடையாது.

மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாஜக.வினரும் அவர்களுடைய கூட்டணியினரும் இந்தியாவை இந்து நாடாக மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தில் நாட்டில் உள்ள எல்லா மதத்தவருக்கும் பாதுகாப்பு, உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதை மீறி இந்து நாடாக பாஜக.வினர் மாற்றி விட்டால் தலித்துகளுக்கு பாது காப்பு கிடையாது. தற்போதுள்ள இடஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.

அதை கேட்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். இடஒதுக்கீட்டு முறையை பரிசீலனை செய்தால் நானே தலைமையேற்று போராட்டத்தை நடத்துவேன். சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார். இது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்