முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்தார் எழுத்தாளர் சாரா ஜோசப்

சனிக்கிழமை, 10 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை கண்டித்து சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிப்பதாக பெண்ணியம் போற்றும் மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப் அறிவித்துள்ளார்.  இவருடன் சேர்த்து 4-வது நபர் சாகித்ய விருதை திரும்ப அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் நயன்தாரா சேகல், கவிஞர் அசோக் வாஜ்பேயி, உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸை தொடர்ந்து மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

இது குறித்து திருச்சூரில் நேற்று பேசிய அவர், அலாயுதே பெண்மக்கள் என்ற எனது நாவலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதையும் அதனுடன் வழங்கப்பட்ட ரூ.50,000 பரிசுத் தொகையையும் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளேன். நாட்டில் சகிப்புத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விரும்பிய உணவை மக்கள் உண்பதற்கும், நேசிக்கும் நபரை ஒருவர் திருமணம் செய்யவும் இங்கு சுதந்திரம் இல்லை. எனவே, பெருகி வரும் சகிப்புத்தன்மையின்மையை கண்டித்து சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிப்பதாக முடிவு செய்துள்ளேன் என்றார்.  இதேபோல், மலையாள கவிஞர் கே.சச்சிதானந்தன் சாகித்ய அகாடமி உறுப்பினர் பொறுப்பை துறப்பதாக அறிவித்துள்ளார். இவர் சாகித்ய அகாடமியின் முன்னாள் செயலாளரும்கூட. சாகித்ய அகாடமி, எழுத்தாளர்கள் கொள்கைகளுக்கு துணை நிற்கவும்;

அரசியல் சாசனம் வழங்கிய கருத்துச் சுதந்திரத்தை பேணவும் தவறிவிட்டது என்பதால் பதவியை துறப்பதாக அவர் கூறியுள்ளார்.  முன்னதாக, கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கொலையை கண்டித்து சாகித்ய அகாடமி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சச்சிதானந்தன் வலியுறுத்திவந்தார்.  இதனால் பல சர்ச்சைகள் எழுந்தது.
சாகித்ய அகாடமிக்கு அவர் எழுதியுள்ள விலகல் கடிதத்தில், நாடு முழுவதும் சுதந்திரமான சிந்தனையாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுவரும் நிலையில், சம்பிராதாயத்துக்காக மட்டும் இரங்கல் கூட்டங்களை சாகித்ய அகாடமி ஒருங்கிணைப்பது போதுமானது அல்ல.

எனவே, சாகித்ய அகாடமியின் அனைத்து உறுப்புகளின் உறுப்பினர் பதவியையும் துறக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவரை சாகித்ய அகாடமி எனக்கு அளித்த கொடைகள் அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், ஒரு பொறுப்புள்ள குடிமகனாக, மனசாட்சியுடைய எழுத்தாளனாக என்னால் சாகித்ய அகாடமி பொறுப்புகளில் தொடர முடியாது. எனவே உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் என்னை விலக்கிக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மேலும் பலர் சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago