முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாத்ரி முஸ்லீம் கொலை உ.பி.அரசு மீது அமைச்சர் நஜ்மா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் பசு இறைச்சியை கொன்று சாப்பிட்டதாக 50வயது முஸ்லீம் முகமது அக்லக் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த  கொலை குறித்து மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் நஜ்மா  ஹெப்துல்லா கூறுகையில், உத்தரப்பிரதேச மாநில அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக தாத்ரியில் முஸ்லீம் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஷாதாவில் உள்ள தாத்ரியில் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் 50வயது முஸ்லீம் முகமது அக்லக் தனது வீட்டில் பசுகன்றின் இறைச்சியை சாப்பிட்டதாக வதந்தி பரவியது. அந்த முஸ்லீம் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக  உள்ளூர் கோவிலில் உள்ள அர்ச்சகர் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்தார். இந்த அறிவிப்பை கேட்டு 200க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று அக்லக்கின் வீட்டிற்கு முன்பாக குவிந்து அவரை வீதியில் இழுத்து வந்து அடித்து கொலை செய்தது. இந்த கொலை குறித்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலை பரவியது.

இந்த நிலையில் மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கூறுகையில் மாநில அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாகவே தாத்ரியில் முஸ்லீம் கொலை செய்யப்பட்டுள்ளார்என்றார். தாத்ரி கொலை வழக்கு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கிறார் என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின. இது குறித்து அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கூறுகையில், தாத்ரி கொலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,மற்றும் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் அரசு தரப்பில் கண்டனம் தெரிவித்து விட்டார்கள். அரசின் நிலைப்பாட்டையும் அவர்கள் உறுதிபடுத்தினர். இருப்பினும் எதிர் கட்சியினர் பிரதமர் மவுனம் சாதிக்கிறாரே என்று சொல்கிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ் வாதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு பொறுப்பாகும். தாத்ரியில் நடந்த நிகழ்வுக்கு மாநில அரசுதான் பதிலளிக்க வேண்டும்.மோடி அரசில் முஸ்லீம்கள் தனித்து விடப்பட்டவர்களை ப்போல உணர்கிறார்கள் என்று எதிர் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். 1947ம்ஆண்டு முதல் முஸ்லீம்கள் இதேப்போன்றுதான் கருதுகிறார்கள். இந்த நிலை தற்போது ஏற்பட்டது அல்ல என்றும் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்