முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் ராணுவ மருத்துவ முகாமில் 10ஆயிரம் மக்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ராணுவம் நேற்று ஏற்பாடு செய்த மருத்துவ முகாமில் 10ஆயிரம் மக்கள் பதிவு செய்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள உத்தம்பூர் மாவட்டத்தில் இருக்கும் பன்சேரி சிறு கிராமத்தில் ராணுவம் சார்பில் நேற்றுமருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் 10ஆயிரம் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இந்த மருத்துவ முகாமை ராணுவத்தின் வடக்கு கமாண்ட் பிரிவு ஏற்பாடு செய்தது.

கிராம மக்கள் விடுத்த வேண்டுகோளைத்தொடர்ந்து இந்த மருத்துவ முகாமிற்கு ராணுவம் ஏற்பாடு செய்தது. மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள கிராமத்தில் போதிய மருத்து வசதிகள் இல்லை, இதன் காரணமாக  மருத்துவ முகாமை நடத்துவதற்கு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். இந்த வேண்டுகோளை ஏற்ற ராணுவமும் பிரமாண்ட மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்தது.இந்த மருத்துவ முகாமை மேஜர் ஜெனரல் எஸ்.பி.எஸ் கோச்சார் துவங்கி வைத்தார்.

இந்த மருத்துவ முகாமில் காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர், கண் மருத்துவ நிபுணர், மகப்பேறு மருத்துவ நிபுணர், குழந்தைகள் மருத்துவ நிபுணர் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் இ.சி.ஜி பரிசோதனையுடன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, பல் மருத்துவம் மற்றும் நோயியல் மருத்துவர் ஆகியோரும் கலந்து  கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்