முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் அவசர நிலை கடைபிடிக்கப்பட்டதால் புதிய வகை அரசியல் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இந்தியாவில் ஒரு கட்டத்தில் அவசர நிலை கடைபிடிக்கப்பட்டது. இந்த அவசர நிலை பிரகடனம் ஜன நாயகத்தினை தாக்கிய பெரு நிகழ்வாக இருந்தது. இந்த எமெர்ஜென்சி நினைவுகள் எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயக அமைப்பை வலிமையுடன் பாதுகாக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.அவசரநிலை பிரகடனத்தால் புதிய வகை அரசியல் இந்தியாவில் மலர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில்  ஜெயப்பிரகாஷ் நாராயணனின் 113வது பிறந்த தின விழா நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில்  எமர்ஜென்சி நிலை மீண்டும் நினைவுக்கூரப்பட வேண்டும். கூச்சல் போடுவதற்காகவோ அல்லது அது மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்பதற்காகவோ நினைவு கூரப்படவேண்டும் என கூறவில்லை. நமது ஜனநாயக மதிப்புகளை வலிமைப்படுத்துவதற்காக அந்த எமெர்ஜென்சி நிலை நினைவு கூறப்பட வேண்டும்என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த 1975-76ம்ஆண்டு கால கட்டத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது அந்த  அவசர நிலையை எதிர்த்து போராடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பாஜக தலைவர் எல்.கே அத்வானி, அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் அவசர நிலை கால கட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் ஆவார்கள். இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்க போராடிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னாள் அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோரது வீடுகளுக்கு முன்னதாக பிரதமர் மோடி சென்று வந்தார்.

எமெர்ஜென்சி நிலையை எதிர்த்து நடந்த போராட்டம் மூலம் ஒடுக்குதல் நிகழ்வுக்கு எதிராக உணர்வு மக்களிடம் எழுந்தது. சிலரை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக நாம் அவசரநிலையை நினைவு கூர வேண்டியதில்லை. ஜனநாயகம் மற்றும் சுதந்திர நிலை இந்தியாவில் தழைத்தோங்க முன்னர் ஏற்பட்ட அவசர நிலையை நினைவு கூர வேண்டியிருக்கிறது எனஅவசர நிலையை பிரகடனப்படுத்திய முந்தைய பிரதமர் இந்திரா காந்தியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்