முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோர்டான் தலைநகரில் மகாத்மா காந்தி சாலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

அம்மான்: ஜோர்டான் தலைநகர் அம்மானில் மகாத்மாக காந்தி சாலையை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  திறந்து வைத்தார். இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தற்போது ஜோர்டான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டிருக்கிறார். அந்த நாட்டின் தலைநகர் அம்மானில் சடசாகுளோவுல் சாலை உள்ளது. அந்த சாலை தற்போது மகாத்மா காந்தி சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த சாலையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  திறந்து வைத்தார்.,இந்த நிகழ்ச்சியில் அம்மான் நகர மேயர் அகுயல் பெல் தகி கலந்து கொண்டார்.

மகாத்மா காந்தியின் பெயர் வைக்கப்பட்டசாலை  அமைதிக்காக பாடுபட்ட சரித்திரத்தை கொண்டதாகும். அந்த சாலை ஜோர்டான் அரசரின் சகோதரர் பெயரில் அமைந்திருந்தது. அவரும் 1946ம்ஆண்டு காலனி ஆதிக்க ஆட்சியின் போது அமைதி வழியில் சுதந்திரம் பெறுவதற்கு போராடியவர் ஆவார் என்று அம்மான் நகர மேயர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்