முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீண்ட தூர இலக்கை தகர்க்க கூடிய ஏவுகணை சோதனை ஈரான் நடத்தியது

ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

டெகரான்ன: நீண்ட தூர இலக்கினை தகர்க்க கூடிய ஏவுகணை சோதனையை ஈரான் நேற்று நடத்தியது. அந்த ஏவுகணை உரிய வழி காட்டுதலுடன் இலக் கை தகர்க்கும் வகையில் அனுப்பப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை குறித்த படங்களை அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம்  வெளியிட்டது.இந்த ஏவுகணைக்கு இமாத் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த ஏவுகணை எவ்வளவு தூர இலக் கை தகர்க்க கூடும் என்கிற விவரங்களை ஈரான் பாதுகாப்பு இணைய தளத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஈரான் ஏவிய முதல் நீண்ட தூர ஏவுகணை இதுவாகும். அந்த ஏவுகணை இலக் கை தாக்கும் வரை உரிய வழி காட்டுதலுடன் அனுப்பப்பட்டது. என்று ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் உசைன் டெகன் தெரிவித்தார். உலக நாடுகளுடன் ஈரான் சமீபத்தில் அணு சக்தி குறித்து ஒப்பந்தம் மேற் கொண்டிருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது இந்த நீண்ட தூர ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தியுள்ளது.இந்த ஏவுகணையில் எந்த வித அணு ஆயுதங்களையும் வைக்க வில்லை என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எதிர் காலத்தில் அணு ஆயுதங்களை தயாரிக்கும் திட்டமும் தங்களிடம் இல்லை என்று  ஈரான் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன்ஈரான் அணு திட்டம் குறித்து ஒப்பந்தம் மேற் கொண்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து அந்த நாட்டிற்கு இருந்த சர்வதேச தடைகள் நீக்கப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago